ஜாஎல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று நேற்று (24) மாகவிட்ட பிரதேசத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் கோனேவ, பண்டுகாபுர பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெலிசர, நீர்கொழும்பு, மதவாச்சி மற்றும் கஹட்டகஸ்திகிலிய ஆகிய நீதவான் நீதிமன்றங்களால் அவருக்கு எதிராக 12 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணையில் ஜாஎல, நீர்கொழும்பு, புத்தளம், அனுராதபுரம், தவரக்குளம், கல்லஞ்சிய பொலிஸ் பிரிவுகளில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் கொள்ளை, வீடுகளை உடைத்து கொள்ளை, கூரிய ஆயுதத்தால் தாக்கி காயம் ஏற்படுத்தியமை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர் என தெரியவந்துள்ளது.
ஜாஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments